பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் 12 பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து 14 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் புதிய பாடங்களை அமைக்கவும் நிதீஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்களின் அலட்சியமே விபத்திற்கு காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.