பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சிஐடி போலீசார் முன்பு இன்று ஆஜரானார். எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார் தெரிவித்ததால் அவர் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கைதுக்கு எதிராக 17ஆம் தேதி வரை இடைக்கால தடைபெற்றுள்ளார்.