ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 18ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முழுமையாக பங்கேற்று விவாதம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதால், கஜகஸ்தான் பயண திட்டத்தை கைவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.