பிறந்தநாள் விழாவில் நண்பர்களுக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சிஞ்சடாவை சேர்ந்த கார்த்திக் என்பவரின் பிறந்தநாள் கடந்த ஜூன் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது கார்த்திக் தனது நண்பர்களான நிலேஷ், சாகர், தீரஜ் ஆகியோருக்கு விருந்து வைத்தார். மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது நிலேஷ் மது பாட்டிலால் கார்த்திக்கின் தலையில் அடித்தார். உடனே நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கார்த்திக்கை 4வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.