ரயில்களில் பயணம் செய்ய, உறவினர்கள் தவிர வேறு யாருக்காவது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ₹10,000 அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், யாருக்கு வேண்டுமானாலும் டிக்கெட் பதிவு செய்யலாம். ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்தி தனிநபர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 24 டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் என விளக்கமளித்துள்ளது.