ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு உள்ளீட்டையா வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
புதிய ரேஷன் கார்டு கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இந்த நிலையில் ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.