சென்னையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது. தற்போது இயக்கப்பட்டுவரும் பேரூந்துகளுடன் கூடுதலாக பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 30 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து தியாகராய நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.