கள்ளக்குறிச்சி விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அரசியல் கட்சியினர் தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறார்கள். இந்நிலையில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே விஷச்சாராய கொடுமைகளைத் தடுக்க நிரந்தர தீர்வு என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விஷச்சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக கூறிய அவர், மெத்தனால் விநியோகத்தை கண்காணிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.