பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்திய திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்காக ரூ. 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியானது நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, திறன் மேம்பாடு திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண் தொழிலாளர் விகிதம் 2024 நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் 24%ஆக உயர்ந்துள்ளது.