திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமர். பெரியார், அம்பேத்கர், அண்ணாவுக்கு முன்பே சமூக நீதியை போதித்த “ஒரே நாயகன் ராமர்” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அவரின் பேச்சு திராவிட கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும், பெரியார், அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்களை அவமதிப்பது போல் உள்ளதாகவும், அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.