தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர்கள் துறைவாரியாக உறுப்பினர்களின் கேள்வி பதில்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அதன்படி இன்று நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் பேசிய சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 4 நகரங்களில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்படும். ஜவ்வாது மலைக்கு போளூர் வழியாக புறவழிச் சாலை அமைக்கும் பணி இந்த ஆண்டு தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.