தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீசார் பணியின்போது உயிரிழந்தால், உடல் ஊனம் அடைந்தால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி பணியின் போது உயிரிழந்தால் 25 லட்சம், சிறப்பு படை போலீசாருக்கு 30 லட்சம், ஊனமடைந்தால் 12 லட்சம், சிறப்பு படை போலீஸ்சாருக்கு 15 லட்சம், காயம் அடைந்தால் 4.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.