மகளிர் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா 603 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் மற்றும் 2வது இன்னிங்சில் 266& 373 ரன்கள் எடுத்தது. 37 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா, எளிதில் இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.