டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு INR 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் அந்த அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்!” என தெரிவித்துள்ளார்.