கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து விவாதம் நடத்த முதல்வர் தயங்குவது ஏன்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான தனது எக்ஸ் பதிவில், கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ கடந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மக்களை முதல்வர் சந்திக்காதது ஏன்? என்ற அவர், மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.