சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய அண்ணன், தம்பி இருவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது நண்பர்கள் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மஞ்சுவிரட்டு விழாவில் மாடுபிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.