கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதையடுத்து பேசிய ஜி.கே மணி, சந்துக்கடை என்ற பெயரில் சாராய விற்பனை நடப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மது கடைகளை மூடுவோம் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பியதுடன் மதுபானம் போலவே கஞ்சா போன்ற போதை பொருள்கள் விற்பனையால் மாணவர்கள் சீரழிவதாக வேதனை தெரிவித்தார்.