மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் நடத்திய ஆய்வில், எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் 26.3 சதவீத பெண்கள் மது அருந்துகிறார்கள். இது மற்ற மாநிலங்களை விட மிக அதிகமாகும். இரண்டாவது இடத்தில் மேகாலாயா 8.7%, மூன்றாவது இடத்தில் அருணாச்சல் பிரதேசம் 3.3% மாநிலமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.