விரைவில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். பொருள்களை டோர் டெலிவரி செய்ய அவற்றை பாக்கெட்டுகளில் அடைக்க வேண்டும் என்றும், பாக்கெட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்காவிட்டால் டோர் டெலிவரி செய்யப்படும் எனவும் அவர் உறுதி தெரிவித்தார். மேலும், ரேஷன் பொருள் டோர் டெலிவரிக்காக 6 மில்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.