பிரதமர் நரேந்திர மோடியால் இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, பாஜகவின் சுரேஷ் கோபி செவ்வாய்க்கிழமை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். கேரளாவைச் சேர்ந்த ஒரே பா.ஜ., எம்.பி.,யான கோபி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராகியுள்ளார்.
மத்திய பெட்ரோலிய இயற்கை எரிவாயு சுற்றுலாத்துறை இணை அமைச்சராக கேரள பாஜக மூத்த தலைவரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி பொறுப்பேற்றுக்கொண்டார். கேபினட் அமைச்சர் பதவி கிடைக்காததால் சுரேஷ்கோபி அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் அவர் பொறுப்பேற்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியான படி இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.