இன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வானது ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், “முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர்.
இது திடீரென்று நடக்கும் நிகழ்வு கிடையாது. கையாளாகாத மத்திய தேர்வு முறையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி. உயர்கல்வி தேர்வு முறையில் மாநில உரிமைகளை மீண்டும் நிலைநாட்ட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.