மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற, நகர்புற வீட்டுவசதி திட்ட வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துமாறு கூறிய அவர், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ திட்டத்துக்கான நிதியை விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.