கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சென்றார். அப்போது ஒரு பெண்ணிடம் நடந்தவை குறித்து கேட்டுக்கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்தார்.
இதனால் கடுப்பான விஜய் அந்த இளைஞர் 1 நிமிடம் முறைத்து பார்த்துவிட்டு திரும்பினார். இதனைக்கண்ட நிர்வாகிகள், மனசாட்சி இல்லையா செல்ஃபி எடுக்குற நேரமா இது என அந்த இளைஞரை கண்டித்தனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.