சீனாவில் வெயிஃபாங் நகரில் வசித்து வருபவர் லின் ஷு. 31 வயதான இவர், 7 ஆண்டுகள் காதலித்த பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.. இந்நிலையில், காதல் மனைவியை பிரிய மனமில்லாமல், வீட்டில் இருந்து சுமார் 160 கி.மீ. தொலைவில் உள்ள அலுவலகத்திற்கு தினமும் 6 மணி நேரம் பயணம் செய்து வருகிறார். மேலும், மனைவிக்காக பயணிப்பதால் 320 கி.மீ. பயணம் களைப்பை ஏற்படுத்துவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.