விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் ‘அகம் பிரம்மாஸ்மி’ பாடல் வெளியாகியுள்ளது. அச்சு ராஜாமணி எழுதி, இசையமைத்து அவரே பாடியுள்ள இப்பாடல், செம மிரட்டலாக இருக்கிறது. குறிப்பாக, படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியில், எதிரிகளை ரத்தம் தெறிக்க தெறிக்க அடித்து நொறுக்கும்போது இடம்பெற்றுள்ள இப்பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.