அசாமில் மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, 24 மாவட்டங்களில் 12.33 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றின் காரணமாக வெள்ளிக்கிழமை மேலும் 7 இறப்புகள் நிகழ்ந்தன. இந்த ஆண்டு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.