செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து நேற்று புறப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர்-மண்ணூர் சாலையில் நெமிலி அருகே வந்தபோது, திடீரென சாலையில் குறுக்கே மாடுகள் ஓடியது. இதனால் டிரைவர், வேகத்தை குறைக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 10 அடி பள்ளத்தில் பேருந்து பாய்ந்தது. பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் எந்த காயமுமின்றி பயணிகள் அதிஷ்டவசமாக தப்பினர்.