ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (41) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். டியூசன் படிக்க வந்த 9ஆம் வகுப்பு மாணவனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.