இந்தியாவில் மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக அஞ்சல் அலுவலகங்களில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அஞ்சல் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 20500 ரூபாய் பெறும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பிறகு வழக்கமான வருமானத்தை இழக்க கூடாது என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.