சமீபத்தில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா, பாஜகவிற்கு எதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மணல் கடத்தல் கும்பலுடன் பாஜகவிற்கு தொடர்புள்ளதாகவும், அவர்களிடம் இருந்து மாதம் ரூ50 லட்சம் முதல் ரூ.80 கோடி வரை பாஜகவினர் பணம் பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பணம் பெறுபவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.