தமிழகத்தில் மாநில சிறுபான்மை ஆணையத் தலைவராக ஜோ அருண் நியமனமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் தலைவராக இருந்த பீட்டர் அல்போன்ஸ் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ஜோ அருணை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், துணைத் தலைவராக எம்.எம்.அப்துல் குத்தூஸ் என்கிற இறையன்பன் குத்தூஸ் நியமனமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனங்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து, தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.