பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை ஒன்றிய அரசு பொதுப்பட்டியலில் சேர்த்ததால் பிரச்னை வந்ததாக குறிப்பிட்ட அவர், இதற்கு இடைக்காலத் தீர்வாக கல்வி, மருத்துவத்திற்கு சிறப்பு பட்டியலை உருவாக்க மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.