தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் என்று ஆலோசனை நடத்த உள்ளார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி ,இராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தேர்தல் நடத்தை விதி முடிவுக்கு வந்த நிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட அரசின் புதிய அறிவிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.