மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, சாதிய மோதல்களால் சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கை காக்கக்தவறியதைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.