தேர்தல் முடிவு வெளியான பின் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு திமுக அதிர்ச்சியளித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் கட்டண உயர்வை பொதுமக்கள் தலையில் சுமத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சூரியஒளி மின் உற்பத்தியை பெருக்குவதோடு, மாதாந்திர மின் கட்டணத்தை கொண்டு வர வேண்டும் என்றும் மின் கட்டண உயர்வை அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.