மத்திய அரசின் மின்சார இயக்க ஊக்குவிப்புத் திட்டம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான மானியத் தொகை ரூ.278 கோடி கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000, சிறிய மின்சார 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.25,000, 3 சக்கர பெரிய வாகனங்களுக்கு ரூ.50,000 மானியமாக வழங்கப்படுகிறது. ஏதர், பஜாஜ், ஓலா உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவன வாகனங்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது.