திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணாடி இலை போன்ற ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின. இந்த ஜெல்லி மீன்களால் தோல் அரிப்பு. ஒவ்வாமை ஏற்படுவதால் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று அதிக அளவில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் மீனவர்கள், பக்தர்கள் அச்சமைடைந்துள்ளனர்.