தமிழகத்தில் உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி உபகரணம் வாங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், நீர்த்தேக்கங்கள், பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசன குணங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களின் மீன் பிடி திறனை மேம்படுத்தும் வகையில் ஆயிரம் மீனவர்களுக்கு பரிசல் மற்றும் வலை போன்ற உபகரணங்கள் வழங்க ஏதுவாக மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.