உலகம் எங்கிலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் மென்பொருள் செயலிழந்திருப்பதால் உலகமே ஸ்தம்பித்து உள்ளது. இந்த நிலையில் டெஸ்லா மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களின் CEO எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், அனைத்துமே செயலிழந்து விட்டது, ஆனால் ட்விட்டர் மட்டும் வேலை செய்து கொண்டிருக்கிறது என தலைப்பிடப்பட்ட பிரபல மீமை பகிர்ந்து கண்ணீர் விட்டு சிரிப்பது போன்ற எமோஜியை பதிவிட்டுள்ளார்.