கள்ளச்சாராயத்திற்கு திமுக துணை போவதுடன் மக்களின் உயிரை எடுக்கிற அரசாக இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்திற்காக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவர், திமுக அரசின் கையாலாகாததனத்தை இந்த சம்பவம் காட்டுவதாக விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு என்று பொய் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் திமுக அளித்ததாக அவர் விமர்சித்துள்ளார்.