கூட்டணியில் இருந்து விலகியதால் முதுகில் குத்திவிட்டார்கள் என்பது அநாகரிகமான பேச்சு என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கடும் விமர்சனம். மோடியின் முதுகில் இபிஎஸ் குத்திவிட்டார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது சர்ச்சையாகி உள்ள நிலையில் வைகைச்செல்வன், அதிமுக பாஜகவின் இன்னொரு அங்கமல்ல. கூட்டணிதான் வைத்திருந்தோம். நம்மோடு கூட்டணி வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை இப்படி பேசுகிறார் என கூறியுள்ளார்.