கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பன்ஷிலால், கவுதம் சந்த் இருவரும் வெளி மாநிலத்தில் இருந்து மெத்தனாலை இறக்குமதி செய்து விற்பதற்கான உரிமம் பெற்றுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கைது செய்யப்பட்ட இவர்கள்தான் கல்வராயன் மலைப்பகுதிகளில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயங்களுக்கு மெத்தனால் வழங்கியிருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.