மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள டீஸ்டா ஆற்றில் சிக்கிம் முன்னாள் அமைச்சர் ஆர்.சி.பௌத்யாலின் (80) உடல் கண்டெடுக்கப்பட்டது. சிக்கிம், பாக்யாங்கில் உள்ள சோட்டா சிங்தாமில் பௌத்யாலின் வீடு உள்ளது. அவருடைய மரணம் தொடர்பான விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பௌத்யாலின் மரணத்தை தொடர்ந்து சிக்கிம் முதலமைச்சர் பிஎஸ் தமாங் இரங்கல் தெரிவித்துள்ளார். பௌத்யால் சிக்கிம் மாநிலத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.