மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளதாகவும், போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடப்பதாகவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.