உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. 5 பைசா, ஏஞ்சல் ஒன் மாதிரியான ஆன்லைன் ப்ரோக்கர் சேவைகளிலும், மோதிலால் ஆஸ்வால் AMC சேவைகளிலும் பாதிப்பு இருந்தது. ஆனால், NSE, BSE மாதிரியான exchange சேவைகளில் பாதிப்பு ஏற்படாததால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.