தமிழகத்தில் மொழி திணிப்பை எப்போதுமே எதிர்ப்போம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். குற்றவியல், தண்டனை மற்றும் சாட்சிய சட்டங்களை திருத்துவதற்காக கூறி குறிப்பிட்ட மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், இந்தி மொழி மட்டுமல்ல வேறு எந்த மொழியாக இருந்தாலும் கட்டாயமாக திணிக்கப்படுவதை தொடர்ந்து எதிர்ப்போம் என்று கூறியுள்ளார்.