நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்று மகிழ்ந்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாற்றம் அறக்கட்டளை தொடங்கியது தொடர்பாக ரஜினியை நேரில் சந்தித்து, அவரிடம் வாழ்த்து பெற்றதாக கூறியுள்ளார். ஏழை, எளியோர், குழந்தைகளுக்கு லாரன்ஸ் உதவிவரும் நிலையில், அவருடன் இணைந்து KPY பாலாவும், பலருக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.