ரயில் பயணத்தின் போது பயணிகள் இடையூறு அல்லது தொந்தரவை சந்தித்தால் இது தொடர்பாக புகார் அளிக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ரயில்வே போலீசாருக்கு 182 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ரயில்வே உதவி எண்கள் ஆனா 138 அல்லது 25354457 அல்லது 25354405 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். அப்போது ரயில் விவரம் மற்றும் அடுத்து வரவுள்ள ரயில் நிலைய பெயரை குறிப்பிட வேண்டும். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.