கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்திற்கு மனித தவறு தான் காரணம் என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நார்த் ஈஸ்ட் விரைவு ரயில் தடம் புரண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
அடுத்து 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி ராயக்கடா பயணிகள் ரயில் மீது பாலஸா பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். பிறகு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஜம்தாரா ரயிலில் தீ பரவல் என்று பரவிய வதந்தியை நம்பி கீழே குதித்த இரண்டு பெண்கள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற கோர விபத்திலும் 15 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.