புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன. இந்த புதிய சட்டங்கள், ஆங்கிலேய ஆட்சியில் இந்தியர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட ரவுலட் சட்டத்திற்கு நிகரானது என ஹைதராபாத் எம்பி அசாதுதின் ஓவைசி விமர்சித்துள்ளார். மேலும், உபா சட்டத்தை விட ஆபத்தானது என்றும், இதன் மூலம் அரசை எதிர்க்கும் யாரை வேண்டுமானாலும் தீவிரவாதி என முத்திரை குத்த முடியும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.